இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் Jayananda Warnaweera காலமானார்
இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரும், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் முன்னாள் தலைமை மைதான பராமரிப்பாளருமான ஜயானந்த வர்ணவீர (Jayananda Warnaweera) தனது 64வது வயதில் காலமானார்.
ஜயானந்த வர்ணவீர 1986 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கை அணிக்காக கிரிக்கெட் விளையாடினார். அவர் மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளிலும் ஆறு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
1994 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடிய தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வர்ணவீர பல்வேறு நிர்வாகப் பதவிகளை வகித்தார்.
குறிப்பாக, அவர் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் தலைமை மைதான பராமரிப்பாளராகவும் (Chief Curator) பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்லரும் இரங்கல்களை கூறி வருகின்றனர்.