கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியினால் மற்றுமொரு பெயர் பரிந்துரை
தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் மற்றுமொரு பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (31) அரசியலமைப்பு சபை கூடவுள்ளதுடன், இதன்போது இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் 4 சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியினால் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக 4 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு சபை உரிய முறையில் நிறைவேற்று அதிகாரத்தைச் செயற்படுத்தாத காரணத்தினால் இதுவரை கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாகவே உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில், புதிய அரசியலமைப்பு சபையின் இரண்டாவது கூட்டம் இன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெறவுள்ளது.