எல்ல பேருந்து விபத்து ; ஓடிவந்து உதவிய பிரித்தானிய பெண் கௌரவிப்பு
எல்ல-வெல்லவாய வீதியில் அண்மையில் நேர்ந்த பேருந்து விபத்தின் போது துணிச்சலான நடவடிக்கை எடுத்தமைக்காக பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று (9) நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற எல்ல-வெல்லவாய வீதி விபத்தில் காயமடைந்த பயணிகளுக்கு ஓடி வந்து உதவிகளை வழங்கிய எமி விக்டோரியா கிப் என்ற குறித்த பிரித்தானிய பெண், சுற்றுலா அமைச்சினால் பாராடப்பட்டார்.
15 பேரை காவு வாங்கிய விபத்து
அவசர சேவைகள் வரும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் ஆறுதல் அளிப்பதற்காக அவர் சம்பவ இடத்தில் முன்வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற அவருக்கான கௌரவிப்பு நிகழ்வில் கருத்து வெளியிட்ட சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க,
"மனிதகுலத்திற்கு எல்லைகள் எதுவும் தெரியாது என்பதை அவரது தன்னலமற்ற செயல்கள் நமக்கு நினைவூட்டுகின்றன என குறிப்பிட்டார்.
எல்ல - வெல்லவாய வீதியில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் முழு நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.