ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார்? நாமல் தொடர்பில் பிமல் ரட்நாயக்க காட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்பில் அமைச்சர் பிமல் ரட்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அமைச்சர் பிமல் ரட்நாயக்க,
நாமல் ராஜபக்ஷ 2029 ஆம் ஆண்டு ஐஸ்லாந்திலா ஜனாதிபதியாக போகிறார். ஐஸ்லாந்து இந்த விடயத்தை அறிந்தால் இலங்கையை விமர்சிக்கும்.
நாமல் ராஜபக்ஷவின் தர்க்கம்
தேசிய மக்கள் சக்தியை எதிர்க்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இன்று ஒன்றிணைந்துள்ளதாகவும் மத்திய வங்கி திருடன் என கூறப்பட்ட ரணிலுடனும் இணைந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தற்பொழுது நாமல் மற்றும் ரணில் தரப்புடனே உள்ளனர், அதனால்தான் கூட்டு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஊடக சந்திப்புக்களை நடத்துகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தி தற்பொழுது ஐஸ் போதைப்பொருள்காரர்களுடன் இருப்பதாகவும் அதனால் அவர்களினால் ஊருக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தான் ஐஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாங்கள் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வந்தோம்.அரசாங்கம் ஏன் அதனை பிடிக்கவில்லை என்பதே நாமல் ராஜபக்ஷவின் தர்க்கம் என்றும் அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்தார்.