எல்ல பேருந்து விபத்து; ஓடி வந்து உதவிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் வியாழக்கிழமை (04) இரவு பஸ் விபத்து இடம்பெற்ற போது காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய பெருமளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரைந்து வந்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த பல சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கியுள்ளனர்.
அத்துடன் அவர்களை மீட்பு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தவும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லவும் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்து சேவையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
மருத்து சேவையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு உதவி செய்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இரவு முழுவதும் பிரதேசவாசிகள் மற்றும் இராணுவ வீரர்களுடன் இணைந்து காயமடைந்தவர்களுக்கு உதவி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 18 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.