இலங்கை வருவோரிற்கு நாளை முதல் கட்டாயமாகும் நடைமுறை; பயண ஆலோசனையை புதுப்பித்த அமெரிக்கா!
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization - ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாளை (15) முதல் மின்னணு பயண அங்கீகார அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும்.
பயண ஆலோசனையை புதுப்பித்த அமெரிக்கா
இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது
மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா தனது பயண ஆலோசனை மூலம் தெரிவித்துள்ளது.