இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை ; இந்தியாவின் பங்கு குறித்து விமர்சனம்
இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டம் மற்றும் அதில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள பங்கு குறித்து அரசாங்கத்தின் கையாளுதலைக் மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தில் இந்தியாவின் ஈடுபாடு, இலங்கையின் சுயாதீன முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பாதித்துள்ளதுடன், தேசியத் தரவுப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுத் தலையீடு குறித்த கவலைகளை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

2012-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக ஏற்கனவே சுமார் 5.6 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. எனினும் 600 மில்லியன் ரூபாயைக் கொண்டு இதன் மென்பொருள் பணிகளை முழுமையாக முடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், இலங்கை தனது தேசிய அடையாள உள்கட்டமைப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு மீது முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டும்.
அத்துடன், இது தொடர்பான தெளிவான விளக்கங்களை உடனடியாக வழங்குமாறும் வசந்த முதலிகே அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.