தென்னிலங்கையில் சூடுபிடிக்கவுள்ள தேர்தல் பிரச்சாரம்... களத்தில் இறங்கிய புதிய கூட்டணி!
தென்னிலங்கையில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் நுகேகொடையில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, முதலாவது மக்கள் கூட்டத்தின் போது மேலும் சில தேசிய வாத அமைப்புகளும், கட்சிகளும் மேற்படி கூட்டணியுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சர்வஜன அதிகாரத்தின் நிலைப்பாடும் இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தொழில் அதிபர் திலித் ஜயவீர உள்ளிட்டவர்கள் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர்.
அதேவேளை சிங்கள தேசிய வாத அமைப்புகளும் இணைந்துள்ளன.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வியத்கமவில் இருந்த உறுப்பினர்களும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.