முச்சக்கரவண்டி கவிழ்ந்து வயோதிபர் உயிரிழப்பு
ஹோமாகம பிட்டிப்பனை – மொரகஹஹேன வீதியின் மாயா பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளைவீதியிலிருந்து பிரதான வீதிக்கு திரும்ப முற்பட்ட முச்சக்கரவண்டி பிரதான வீதியில் வேகமாகப் பயணித்த வேனில் மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹோமாகம பனாகொட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் ஹோமாகம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.