எம்.ஜி.ஆரின் 50 வருட வரலாற்றை மாற்றிய தமிழக முதல்வர் விஜய் ; தட்டி தூக்கிய த.வெ.க
தமிழக முதல்வர் விஜய் தமிழக வெற்றில் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு 35 சதவீத வாக்குகளையும் பெற்றார்.
இது மறைந்த நடிகர் மற்றும் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 1977ம் வருடம் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் வாங்கியதை விட இரண்டு சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

இடைத்தேர்தல்
இந்நிலையில்தான் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது.
5 மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் அந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் மக்கள் வாக்களித்து அதை வெற்றி பெற வைத்திருந்தனர்.
1977ம் வருடம் அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கிய போது அவர் சந்தித்த முதல் பொதுத்தேர்தலில் தாராபுரத்தில் மட்டும் இரட்டை இலை சின்னம் அவருக்கு கிடைக்கவில்லை. மாறாக சிங்கம் சின்னமே கிடைத்தது.
வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட நடைமுறைகளில் ஏற்பட்ட சில மாற்றத்தால் அய்யாசாமி என்கிற வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்து விட்டது. அதிமுக வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் சிங்கம் சின்னத்தை ஒதுக்கியது.
எனவே, ‘தாராபுரம் பகுதியில் சிங்கம் சின்னத்திற்கு வாக்களியுங்கள். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்காதீர்கள்’ என எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்தார். ஆனாலும் மக்கள் அதை கேட்காமல் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்தனர்.
அப்படி 50 வருடங்களாக இரட்டை இலை சின்னத்தில் ஊறிப்போன தாராபுரம் மக்கள் இடைத்தேர்தலில் விஜயின் விசில் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்துவிட்டனர். இதன் மூலம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய 50 வருட வரலாற்றையே விஜய் மாற்றியிருக்கிறார்.