நினைத்ததை முடிப்பவர்.. நாளை நமதே.. வரலாறும் நமதே; நடிகர் சிபிராஜ் டிவிட்
நடிகர் சிபிராஜ் தனது எஸ் தளத்தில் ‘நினைத்ததை முடிப்பவர்.. இனி நாளை நமதே.. விடியல் நமதே.. வரலாறு நமதே’ முதலமைச்சர் விஜய்க்கு வாத்து கூறியுள்ளார்.
இவர் நடிகர் சத்யராஜின் மகன் நடிகர் சிபிராஜ் முதலமைச்சர் விஜயின் தீவிர ரசிகர். பல வருடங்களாகவே திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இடைத்தேர்தலில் தவெக வெற்றி
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கிய போது திரையுலகிலிருந்து முதல் நபராக வாழ்த்து தெரிவித்ததோடு, ஆதரவும் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்தின் போதும் நடிகர் சிபிராஜ் , முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறினார். மேலும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விஜய்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட அவர் ஆசைப்பட்டதாகவும் ஆனால் அதை அவரின் தந்தை சத்யராஜ் தடுத்ததாகவும் ஒரு செய்தியும் உண்டு. தவெக வெற்றிபெற்று விஜய் முதல்வரானதும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
தாராபுரம், மதுராந்தகம் இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. எனவே, தவெகவினர் இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் சிபிராஜ் தனது எஸ் தளத்தில் ‘நினைத்ததை முடிப்பவர்.. இனி நாளை நமதே.. விடியல் நமதே.. வரலாறு நமதே’ என பதிவிட்டுள்ளார்.