ரியாத்திற்கான விமானச் சேவைகளை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
சவூதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ரியாத்துக்கான அனைத்து விமானச் சேவைகளையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடுகளும் செயல்பாட்டு ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானச் சேவைகள்
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தமது முதன்மையான முன்னுரிமை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வலியுறுத்தியுள்ளது.
வணிக விமானச் சேவைகளை முன்னெடுப்பதற்குப் பொருத்தமான சூழ்நிலை குறித்து மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே ரியாத்துக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விமான சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பயணிகள் பின்வரும் வழிகளில் தொடர்புகொள்ளலாம்: இலங்கைக்குள்: 1979
சர்வதேச அழைப்புகளுக்கு: +94 11 777 1979
WhatsApp:+94 74 444 1979
தமது பயண முகவரைத் தொடர்புகொள்ளலாம் அல்லது www.srilankan.com https://www.srilankan.com என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.
ரியாத்துக்குப் பயணிக்கவுள்ள அல்லது ரியாத்திலிருந்து பயணிக்கவுள்ள பயணிகள், தமது விமானப் பயணங்கள் தொடர்பான சமீபத்திய தகவல்களை விமான நிறுவனம் அல்லது பயண முகவர் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.