திருகோணமலை வீதி விபத்தில் வயோதிபர் பலி
மட்டக்களப்பு வாகரை திருகோணமலை வீதியில் இன்று (2024.04.05) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கண்டியைச் சேர்ந்த நாகபூசனி வயது- 74 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து வாகரை வீதி ஊடாக கண்டியை நோக்கிச் சென்ற சிறிய ரக காரானது பாதையை விட்டு விலகி வாகரை இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் சம்பவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் பயணம் செய்தவர்கள் எவருக்கும் காயம் எதுவும் இடம்பெறவில்லையென தெரிவித்தனர்.
ஜரோப்பிய நாடொன்றில் இருந்து சுற்றுலாவிற்காக வந்த தாய்,மகள் மற்றும் சிறுவன் உட்பட்ட குடும்ப உறுப்பினர்களே இவ் விபத்து சம்பவத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும், சடலம் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.