வைட்டமின் ஏ குறைப்பாட்டால் ஏற்படும் விளைவுகள்
வைட்டமின் ஏ நம்முடைய உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும்.
இது கண் ஆரோக்கியம் முதல் சருமத்தை இளமையாகவும் ஹெல்த்தியாகவும் வைத்திருப்பது வரை ஏராளமான வேலைகளைச் செய்கிறது.
இந்த வைட்டமின் ஏ-வுக்குள் இருக்கும் பீட்டா கரோட்டீன் உடலுக்கு மிக அவசியம்.
இது குறையும்போது உடலில் ஏற்படும் சில அறிகுறிகள் பற்றி அறிந்துக்கொள்வோம்.
கண் பார்வை குறைபாடு
வைட்டமின் ஏ குறைபாடு உடலில் ஏற்படும்போது முதலில் கண்பார்வை பாதிப்படையக்கூடும்.
கண் பார்வை மங்கலாகத் தெரிய ஆரம்பிக்கும். கண்ணில் வறட்சி ஏற்படுவது ஆகியவை உண்டாகும்.
குறிப்பாக வைட்டமின் ஏ குறைபாடு அதிகமாகும்போது மாலைக்கண் நோய் உண்டாகும்.
இரவு நேரங்களில் வழக்கத்தை விட பார்வை மங்கலாகத் தெரிய ஆரம்பிக்கும்.
அழற்சிகள் ஏற்படல்
வைட்டமின் ஏ பற்றாக்குறை ஏற்படும் போது உடலில் மிக எளிதாக இன்ஃபிளமேஷன்கள் உண்டாகும்.
இந்த இன்ஃபிளமேஷன்களால் நோயெிர்ப்பு மண்டலம் பலவீனம் அடையும்.
இதனால் மிக எளிதில் நோய்த் தொற்றுக்கள் உடலைத் தாக்கக் கூடும்.
இதை கண்டுகொள்ளாமல் விடும்போது உடலில் நாள்பட்ட இன்ஃபிளமேஷன்கள் ஏற்பட்டு அது எலும்புகள் வரையிலும் பாதிக்கக்கூடும்.
சரும வறட்சி
வைட்டமின் ஏ சருமத்தில் ஏற்படும் சேதங்களை சரிசெய்து சருமத்தை ஹீலிங் செய்யும் பண்பு கொண்டது.
குறிப்பாக சருமத்தில் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டது.
அத்தகைய வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படும்போது சருமத்தில் அதிகப்படியான வறட்சி மற்றும் வீக்கத்தை சந்திப்பீர்கள்.
உடல் வளர்ச்சி
குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ மிக முக்கியம்.
இது குழந்தைகள் உயரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவி செய்யும் சத்துகளில் அத்தியாவசியமானது.
வைட்டமின் ஏ உணவுகளை குழந்தைகள் சாப்பிடாத போது, வைட்டமின் ஏ குறைபாடு உண்டாகி, அவர்களுடைய வளர்ச்சியைத் தடுக்கும்.
அதோடு சிறுவயது முதலே குழந்தைகளின் கண் பார்வையும் பலவீனமடையும்.