நாளை திருமணம் ; இன்று மணகனின் கண் முன்னே பறிபோன மணப்பெண்ணின் உயிர்
இந்தியாவின் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவிலியர் தேர்வில் பங்கேற்பதற்காக மணப்பெண்ணை மணமகன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

மேலதிக விசாரணை
வாடிப்பட்டி அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த சிற்றூந்தின் டயர் திடீரென வெடித்ததாகவும், இதனால் கட்டுப்பாட்டை இழந்த சிற்றூந்து மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மணப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மணமகன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினரிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.