நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; நான்கு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி
தனமல்வில சர்வோதயா கங்கேபாய உப வீதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை நேருக்கு நேர் மோதி இன்று சனிக்கிழமை (12) இவ்விபத்து இடம்பெற்றுள்ளதோடு குறித்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு இளைஞர்களும் தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்களில் மூவர் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவ்வாறு எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை மோசமடைந்ததையடுத்து குறித்த இளைஞன் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்தில தனமல்வில கல்வலயாய பகுதியைச் சேர்ந்த 16 18 19 மற்றும் 31 வயதுடைய இளைஞர்களே காணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் தனமல்வில பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.