ஐரோப்பிய ஊடகம் வியந்த ஈழத்தமிழ் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா!

IBC Tamil Tamil diaspora Netherlands Reecha Baskaran Kandiah
By Sulokshi Aug 11, 2026 12:48 PM GMT
Report

றீச்சா உணவு திருவிழாவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாதபிரதிவாதங்க்கள் இடம்பெற்று வரும் நிலையில் , நெதர்லாந்து ஊடகம் வியந்த ஈழத்தமிழர் பாஸ்கரன் கந்தையா தொடர்பில் வெளிவந்த செய்திதான் இது.

நெதர்லாந்து ஊடகம் ஒன்றில் கடந்த வாரம், புலம்பெயர் ஈழத் தமிழர் பாஸ்கரன் கந்தையா தொடர்பில் வெளிவந்த கட்டுரையை அவதூறு பரப்புவோர் அறிந்து கொள்ளவேண்டும். அந்தவகையில் நெதர்லாந்து ஊடகம் வெளியிட்ட கட்டுரையில், டச்சு மண்ணை அதிரவைத்த தமிழர் நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்.

ஐரோப்பிய ஊடகம் வியந்த ஈழத்தமிழ் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா! | Eelam Tamil Entrepreneur Baskaran K Dutch Media

நெதர்லாந்தின்  செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த  ஈழத்தமிழர்

நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம், பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள் ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அகதிகளாக தடம் பதித்து, தமது கடின உழைப்பால் வெற்றி மீது வெற்றி குவித்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில் , பாஸ்கரன் கந்தையா என்ற பெயர் இன்றைக்கு உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து நிற்கிறது என நெதர்லாந்தின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான 'Quote Net' அண்மையில் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்று, டச்சு மண்ணில் ஒரு ஈழத்தமிழர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வணிகச் சாம்ராஜ்யத்தையும், தனது தாய்நிலம் மீதான காதலையும் , நன்றியுணர்வையும் வெகுவாக பாராட்டியுள்ளது .

சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

நெதர்லாந்து நாட்டின் ஆகப்பெரிய மில்லியனர்களைக் வரிசைப்படுத்தும் 'Quote 500' பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்து பெருமைப்படுத்தியிருக்கும் அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு பரபரப்பான நாவலைப் போலவும், திரைப்படக் காட்சிகளைப் போலவும் வர்ணித்துள்ளது.

அந்த டச்சு ஊடகத்தின் துல்லியமான நிதி மதிப்பீட்டின்படி, திரு . பாஸ்கரன் கந்தையாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 165 மில்லியன் யூரோக்கள் ஆகும்.

ஐரோப்பிய ஊடகம் வியந்த ஈழத்தமிழ் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா! | Eelam Tamil Entrepreneur Baskaran K Dutch Media

அதாவது நமது இலங்கை ரூபாய் மதிப்பில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாயைத் தொடுகிறது (LKR 54.45 Billion).

இந்த பிரமாண்டமான நிதிப் பலம்தான் அவரை நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437-வது இடத்தில் கம்பீரமாக அமர்த்தியிருக்கிறது எனவும் . இந்த எண்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் அசாத்தியமான துணிச்சலும்தான் உண்மையிலேயே வியப்பளிக்கக்கூடியவை எனவும் அவர்கள் வியப்படைந்துள்ளனர் .

யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் ஒரு சாதாரன வறிய குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், தனது இளமைக் காலத்தில் இலங்கையில் நிலவிய போர் மேகங்களினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் ஐரோப்பாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார்.

நெதர்லாந்து மண்ணில் காலூன்றிய அவர், தன் முன்னாலுள்ள சவால்களைக் கண்டு அஞ்சாமல் தனது முப்பதாவது வயதில் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'லெபாரா மொபைல்' (Lebara Mobile) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் புகழாரம் 

தாயகத்தையும், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களையும் குறைந்த செலவில் இணைக்கும் அவரது தொலைநோக்கு வர்த்தக உத்தி, ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. 2017-இல் அந்த நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்றதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் தமிழ் மில்லியனராக உயர்ந்தார்.

அதோடு லெபாராவோடு நின்றுவிடாது 2014-இல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'IBC தமிழ்' ஊடகக் குழுமத்தைக்கொள்வனவு செய்து , அதனை ஈழத்தமிழர்களுக்கான எல்லைகடந்த ஒரே ஒரு பேரூடகமாக உருவாக்கி இன்றும் அதன் தலைவராகத் தனது பயணத்தை தொடர்கிறார் .

ஐரோப்பிய ஊடகம் வியந்த ஈழத்தமிழ் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா! | Eelam Tamil Entrepreneur Baskaran K Dutch Media

ஐரோப்பிய பொருளாதாரச்சூழலில் வெற்றிகரமான வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டிய பிறகும், தான் பிறந்த தாய்நிலத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக போரினால் சிதைந்து கிடந்த தாயகப்பகுதிக்கு மீண்டும் பொருளாதார ரீதியாக உயிர் கொடுக்க வேண்டும் என்ற அவரது தணியாத ஆசையின் விளைவாக உருவானதுதான் 'ரீச்சா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையம் ஆகும் .

பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் இயற்கை உரங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கரிமப் பண்ணைகள், பலவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, பிரமாண்டமான நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க் என அனைவரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலாச் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார்.

அத்துடன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நட்சத்திர விடுதிகள் அறைகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உணவகங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. "முப்பதாண்டு கால கொடூர போருக்குப் பிறகும் நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டு வளர்ச்சிப் பணிகள் எவையும் நடக்கவில்லை.

எனது சொந்த மண்ணுக்கும், என்னை உருவாக்கிய மக்களுக்கும் என்னால் முடிந்த மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த பிரமாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ளது" என்று Quote இதழிடம் பாஸ்கரன் கந்தையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வட இலங்கையின் பொருளாதாரம் தேக்கமடைந்து கிடந்த சூழலில், ரீச்சா மையத்தில் பாஸ்கரன் செய்த முதலீட. அந்தப்பகுதியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைக்கு அந்த மையத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதிநேர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன. அதுமட்டுமன்றி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இதனால் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த இதழ் புகழாரம் சூடியுள்ளது

. ஈழத்தமிழர்களின் தேச நலன் தொடர்பிலான கருத்தாடல்களில் தேசிய முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சரியானமுறையில் சமூகமயமாக்கப்படாமல் , ஒரு தரப்பின் விமர்சனம் இருந்து வந்தாலும் , தேவையுடைய ஒரு சமூகத்தின் பொருளாதார தேவையாக பாஸ்கரன் கந்தையா இருந்து வருகிறார் .

ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் ஒன்றில் புகழாரம் சூட்டப்படும் ஒரு ஈழத்தமிழரை எண்ணி நமது சமூகமும் பெருமையுறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி ஒரு முன்னுதாரனமாக தனது கனவுகளை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறார் திரு பாஸ்கரன் கந்தையா  என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US