வெற்றியின் விளிம்பில் டலஸ்; வேலையை காட்டுவாரா ரணில்! கசிந்த தகவல்
இலங்கையில் கடும் பொருளாதார நெருகட்டியால் மக்கள் கொதித்தெழுந்ததை அடுத்து நாட்டைவிட்டி வெளியேறிய கோட்டபாய ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.
இதனையடுத்து பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொருப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி பதவிக்காக ஐதேகவின் ரணில், விக்கிரமசிங்க , பெரமுனவின் டலஸ் அழகப்பெரும, ஜேவிபி இன் அனுர திசாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் மூவரின் நாட்டின் ஜனாதிபதியாக யார் வருவார் என்கின்ற எதிபார்ப்பு இலங்கையில் மட்டுமல்லாது சர்வதேசத்தின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. அந்தவகையில் யார் நாட்டின் அதிபராவார் என்பது நாளை தீர்மானிக்கப்படவுள்ள நிலையில், போட்டியிடும் மூவரில் டளசுக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அந்தவகையில்,
ஐக்கிய மக்கள் கூட்டணி – 50
ஐக்கிய மக்கள் சக்தி – 37
தமிழ் முற்போக்கு கூட்டணி – 05
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 04
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 02
அபி ஶ்ரீலங்கா (குமார வெல்கம) – 01
43 ஆம் படையணி (சம்பிக்க)- 01
சுயாதீன அணிகள் – 31
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – 10
தேசிய சுதந்திர முன்னணி – 06
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் – 02 (இன்னும் இறுதி முடிவு இல்லை)
ஜனநாயக இடதுசாரி முன்னணி – 01
இலங்கை கம்யூனிஸ் கட்சி – 01
லங்கா சமசமாஜக் கட்சி – 01
தேசிய காங்கிரஸ் – 01
எமது மக்கள் சக்தி – 01
யுதுகம – 01
பிவிதுரு ஹெல உறுமய – 01
அசங்க நவரத்ன – 01
அநுர பிரியதர்சன அணி – 05
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
(டலஸ் அணி) – 25 (டலசுக்கு ஆதரவான மொட்டு கட்சி எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 10
( தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை. அக்கட்சியின் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்கினால் டலசுக்கான வெற்றி வாய்ப்பு குறையும். வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலை வகித்தால் அது டலசுக்கு சார்பாக அமையும்.
கூட்டமைப்பின் முழு அதரவு டலசுக்கு எனில், அவருக்கான ஆதரவு 116 ஆக உயரும்.)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 02 (நடுநிலை வகிக்கபோவதாக அறிவித்துள்ளது)
சிவி விக்னேஸ்வரன் – 01 (அவரும் நடுநிலை அறிவிப்பை விடுத்துள்ளார்)
கூட்டமைப்பு, கஜா, விக்கி அணிகள் நடுநிலை வகிக்க, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களில் சிலர், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் சிலர், முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் சிலர், சஜித் அணி உறுப்பினர்கள் சிலர் மொத்தம் 10 என எடுத்துக்கொள்வோம்.அப்போதும் டலசுக்கான வெற்றி வாய்ப்பு குறையும்.(106-10) 96
கூட்டமைப்பு, விக்கி, கஜா அணிகள் நடுநிலை வகிக்க மேற்படி கட்சிகளின் எண்ணிக்கை மாறாது, மொட்டு கட்சியின் மேலும் 6 எம்.பிக்கள்வரை டலஸை ஆதரித்தால், அவரால் இலகுவில் ‘113’ என்ற இலக்கையும் அடையமுடியும்.
இ.தொ.கா. ரணிலை ஆதரித்தால், டலசுக்கான சுயாதின எம்.பிக்களின் ஆதரவு எண்ணிக்கை 29 ஆக குறையும்.