கல்லறை, சவப்பெட்டி வடிவில் திகிலூட்டும் உணவு வகைகள்; ஏன் தெரியுமா!
துபாயில் வருகிற 31-ந் தேதி ஹாலோவீன் திருவிழாவுக்காககல்லறை, சவப்பெட்டி வடிவில் திகிலூட்டும் உணவு வகைகளுடன் , நகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கல்லறை, சவப்பெட்டி, எலும்புக்கூடும் மற்றும் பேய் வடிவிலான திகிலூட்டும் உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹாலோயீன் கொண்டாட்டங்கள்
சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்த சம்ஹைன் மதத்தை பின்பற்றும் மக்கள் கொண்டாடிய செல்டிக் அல்லது கெல்டிக் என்ற அறுவடை திருவிழாவில் இருந்து இந்த ஹாலோவீன் திருவிழா வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளானது கோடை காலத்தின் முடிவு என்றும், குளிர்காலத்தின் தொடக்கமாகவும் அன்றைய மக்கள் கருதினர்.

குறிப்பாக ஒளி குறைந்து இருள் பரவ தொடங்கும் காலம் என்பதால் இறந்தவர்கள் பேய்களாக அவர்களுடைய இடத்திற்கு வருவதாகவும், அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை சேதப்படுத்துவதாகவும் நம்பினர்.
எனவே தந்திர முறைகளை பயன்படுத்தி பயமுறுத்தி விளையாடுவது, பல்வேறு தீங்குகளை விளைவிப்பது போன்ற செயல்களை செய்தால் பேய்களை பதிலுக்கு பயம்காட்டி விரட்டலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இதில் கல்லறைகளுக்கு சென்று பேய்களுக்கு பிடித்தமான உணவுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி அங்கு நெருப்பை மூட்டி பேய்களை விரட்டியடித்ததாக வரலாறுகள் கூறுகின்றன. 20-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பண்டிகையாக ஹாலோவீன் மாறியது.
திகிலூட்டும் உணவு வகைகள்
அங்கு ஆல் ஹாலோஸ் ஈவ் என கொண்டாடப்பட்டது. அதில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர் 31-ந் தேதி ஹாலோவீன் திருவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கடந்த சில ஆண்டுகளாக துபாயிலும் இந்த கொண்டாட்டம் களை கட்டி வருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பே வீடுகளில் அலங்கரிக்க தொடங்கி உள்ளனர்.
ஜாக் ஓ விளக்குகள் என அழைக்கப்படும் பெரிய பூசணிக்காய்களின் சதைப்பகுதியை நீக்கி விட்டு அதில் பேய்முகம் போன்று உருவாக்கி அதில் வண்ண விளங்குகளை ஏற்றி வீட்டின் முன்பு வைக்கின்றனர்.

சிலர் வீடுகளை பேய் வீடாக மாற்றுகின்றனர். இதில் அடுத்தகட்டமாக ஓட்டல்களில் ஹாலோயீன் கொண்டாட்டங்களும் நடைபெறுகின்றன.
இதில் முக்கிய அம்சமாக கல்லறை வடிவிலான கேக்குகள், எலும்பு கூடு, பேய் வடிவிலான திகிலூட்டும் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.