இரட்டை குடியுரிமை குற்றச்சாட்டு நிராகரம் ; அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தமது அரச பதவிக் காலத்தில் இரட்டைக் குடியுரிமை எதனையும் கொண்டிருக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அவர் இலங்கைக் குடியுரிமை மற்றும் அவுஸ்திரேலியக் குடியுரிமை ஆகிய இரண்டையும் கொண்டிருந்தாரா அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது முறையாக அவுஸ்திரேலியக் குடியுரிமையைத் துறந்தாரா என்பது குறித்து அண்மையில் வெளியான ஊடகச் செய்திகளுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இது குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கு செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஹர்ஷன சூரியப்பெரும நாடாளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்த காலப்பகுதியில் இரட்டைக் குடியுரிமை கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், அவர் இரட்டைக் குடியுரிமை பெற்றவராக இருந்திருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், அவர் அந்தப் பதவிகளை வகித்தபோது இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்பதைப் பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.