தமிழர் பகுதியொன்றில் மாணவர்களுக்கும் போதைப்பொருள் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை புறநகர் பகுதியில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் வியாபாரி
கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பெரிய நீலாவணை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதலில் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி 30 கிராம் ஹெரோயின் மற்றும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானார்.
இச் சந்தேக நபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையில் சாய்ந்தமருது பொதுச்சந்தை மாடியில் கைது செய்யப்பட்டவராவார்.
குறித்த சந்தேக நபர் அண்மைக்காலமாக இளைஞர்கள் மாணவர்களுக்கு அதிகளவான போதைப்பொருட்களை மருதமுனை பகுதியில் விநியோகித்து வந்த நிலையில் இரகசிய தகவல் ஒன்றை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைதான 44 வயதுடைய சந்தேக நபரை சனிக்கிழமை(3) கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.