யாழ் இளைஞனின் உயிருக்கு உலைவைத்த போதை ஊசி
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினை ஊசிமூலம் செலுத்திய இளஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (23) கலட்டி பகுதியில் உயிரிழந்த நிலையில் இவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அளவுக்கதிமான ஹெரோயின்
மற்றொருவருடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த நிலையில், ஊசி மூலம் அளவுக்கதிமான ஹெரோயின் செலுத்தப்பட்டதால் அந்த இடத்திலேயே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் தலையில் சிறு காயங்கள் காணப்பட்டதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பிரதேசவாசிகளால் எழுப்பப்பட்டிருந்தது.
உயிரிழந்தவரின் சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் செலுத்தியதால் மரணம் நிகழ்ந்தது உறுதியாகியுள்ளது.
உடலில் ஊசி செலுத்திய அடையாளங்கள் காணப்பட்டதுடன், ஊசி செலுத்திய பின் அவர் நிலத்தில் விழுந்த போது, தலையில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.