இலங்கைக்கு அருகில் ஈரானிய கப்பல் தாக்கியது நாங்களே ; பரபரப்பை கிளப்பிய அமெரிக்க தரப்பினர்; பலர் பலி?
Update: ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூலம் மூழ்கடித்ததாக அமெரிக்க போர் செயலக செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, ஹெக்செத் இந்தியப் பெருங்கடலில், ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான கப்பலொன்று விபத்துக்குள்ளாகியது,
விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளாதகவும், அவர்கள் பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
A U.S. submarine sunk an Iranian warship in international waters, says U.S. defence secretary Pete Hegseth.
— Sky News (@SkyNews) March 4, 2026
He says it's the "first sinking of an enemy ship by a torpedo since the Second World War".
Iran latest 🔗 https://t.co/MSOfDN6aRq
📺 Sky 501 pic.twitter.com/67JYtqLngA