யாழ் வந்த பேருந்தில் சாரதிக்கு திடீர் சுகயீனம்; காப்பாற்றப்பட்ட உயிர்கள்
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து சாரதிக்கு ஏற்ப்பட்ட திடீர் சுகயீனம் ஏற்பட்டதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.
எனினும் சாரதி சாதுரியமாக பேருந்து நிறுத்தப்பட்டு பல பயணிகள் பாதுகாப்பாக பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
காப்பாற்றப்பட்ட பயணிகள்
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதிக்கு திடீரென தலைச் சுற்று பேருந்து தடுமாறியுள்ளது.
இதனால் சாவகச்சேரியை அண்மித்த போது சற்று தடுமாறியதை உணர்ந்த பேருந்தின் சாரதி உடனடியாக பேருந்தை சாவகச்சேரி வைத்தியசாலை முன் வீதியிலேயே நிறுத்திக் கொண்டு பின்னர் ஓட்டுனர் ஆசனத்தில் சரிந்துள்ளார்.
இதனால் இடம்பெறவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டதுடன் பயணிகளும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டனர்.