வெளிநாட்டு பெண்களுக்கு ஆபத்தாக மாறுகிறார்களா இலங்கை ஆண்கள்? முகம் சுழிக்கவைத்த மற்றுமொரு இளைஞன்
பரகஹதெனிய-மாவதகம வீதியில் நாட்டிற்கு வருகை தர வந்த வெளிநாட்டுப் பெண்களிடம் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட மற்றுமொரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறுகம்பே பகுதியில் இதேபோன்று வெளிநாட்டுப் பெண்ணிடம் தவறான நடத்தையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கண்டி பிரதேசத்திலும் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட மற்றுமொரு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநாகரீகமான நடத்தை
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டு வெளிநாட்டுப் பெண்களைப் பார்த்து அநாகரீகமாக நடந்து கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் கடந்த நாட்களாக பகிரப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர் நேற்று (17) சுற்றுலா பொலிஸ் பிரிவின் கண்டி பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல், மாவதகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என்றும், இந்த சந்தேக நபர் மீது ஏற்கனவே பல போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக சுற்றுலா பொலிஸ் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.