வானை எட்டும் தங்கத்தின் விலை ; இனி தான் ஆரம்பம், பகீர் கிளப்பும் பாபா வாங்கா
பல்கேரிய நாட்டவரான பாபா வாங்காவின் எதிர்காலம் குறித்த முன்னறிவிப்புகள் உலகளவில் புகழ்பெற்றவை. அவரின் பல கணிப்புகள் நிஜமாகியிருப்பதாக பலராலும் நம்மப்பபடும்.
அந்த வகையில் பாபா வங்காவின் கணிப்புப்படி, எதிர்காலத்தில் பணத்தின் மதிப்பு உலகளவில் வீழ்ச்சியடையும் என்பதுடன் அதற்குப் பதிலாக தங்கம், வெள்ளி மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள் என்று கூறியிருந்தார்.

தங்கத்தின் விலை
தற்போது, 2026இல் சந்தை நிலவரம் பாபா வங்காவின் கணிப்பை உறுதிப்படுத்துவது போல, உலோகங்களின் விலை இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
பணத்தின் வீழ்ச்சியும், தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களின் விலை உயர்வும் பாபா வாங்கா கூறியது போலவே நடப்பதாக பலர் கருதுகின்றனர்.
ஆனால், நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை, தங்கம், தாமிரத்தின் தேவை அதிகரிப்பு, உலகளாவிய பணவீக்கத்தின் விளைவாகவே விலை உயர்வு ஏற்படுகிறது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே 2026-ன் இறுதிக்குள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்னும் பல மடங்கு உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. அதேநேரம், 2026இல், உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது.
சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம். இதன் உச்சமாக 2026-ல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.