மசாஜ் நிலையத்திற்குள் போதைப்பொருளுடன் பிடிபட்ட பெண் ; சிக்க வைத்த பொலிஸ் நாய்கள்
ஹபரண ஜெயசெங்கம பகுதியில் நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த மசாஜ் மைய உரிமையாளரான பெண் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நாய்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட பெண் நான்கு கிராம் நூறு மில்லிகிராம் ஐஸ் வைத்திருந்ததாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐஸ் விற்பனை
சந்தேக நபர் லிஹினியமுல்ல, உடவல மற்றும் மிரிஸ்ஸ பகுதிகளில் வசிக்கும் 56 வயதுடைய பெண் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பெண் ஹபரணை-திருகோணமலை பிரதான வீதியில் உள்ள கிராமத்தில் மசாஜ் நிலையம் நடத்தி வருவதாகவும், நீண்ட காலமாக வாடிக்கையாளர்களுக்கு ஐஸ் விற்பனை செய்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.