காலை எழுந்தவுடன் இதையெல்லாம் பார்க்காதீர்கள்! தேவையில்லாத பிரச்சனையை சந்திப்பீர்கள்
காலையில் எழுந்ததும் நாம் கடைப்பிடிக்கின்ற சில பழக்க வழக்கங்களில் சில , நமக்கான நன்மையையும், சில விஷயங்களால் நமக்கு தீங்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி காலையில் எழுந்தவுடன் கடவுள் மற்றும் குழந்தைகளின் முகத்தைப் பார்ப்பது நல்லது என சொல்லப்[படுகின்றது. அதேபோல காலையில் எழுந்தவுடன் சில பொருட்களை பார்த்தால் அது நல்லதல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில்,

ஓடாத கடிகாரம்:
காலையில் எழுந்தவுடன் நீங்கள் ஓடாமல் நிற்கும் கடிகாரத்தைப் பார்க்கக்கூடாது. இது அந்த நாளை மிகவும் மேசமான நாளாக மாற்றிவிடும் என்று நம்பப்படுகிறது. மேலும் வாஸ்து படி, கடிகாரம் நிறுத்தப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்குமாம்.

உடைந்த கண்ணாடி:
காலையிலேயே உடைந்த கண்ணாடியை பார்க்கக்கூடாது. அதிலும் முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்து இருக்க கூடாது. மேலும் உடைந்து போன எந்த ஒரு பொருளையும் காலையில் எழுந்தவுடனேயே பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல என சொல்லப்படுகின்றது.

கழுவாத பாத்திரங்கள்:
காலையில் கழுவாத பாத்திரங்களை பார்க்க வேண்டாம். இதற்காக இரவு உறங்கச் செல்வதற்கு முன் உணவுப் பாத்திரங்களை சுத்தம் செய்துவிட்டு சமையல் அறையையும் சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

செல்லப்பிராணி:
சிலருக்கு காலையில் எழுந்தவுடன் தமது செல்லப்பிரானியை பார்க்கவேண்டும். ஆனால் வாஸ்துப்படி வனவிலங்குகளை காலை எழுந்தவுடன் பார்ப்பது நல்லதல்ல.
மேலும், எழுந்தவுடன் உடனடியாக செல்லப்பிராணியைப் பார்த்தால், தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது என்று நம்பப்படுகிறது. அதே போல எழுந்ததும் வனவிலங்குகளின் புகைப்படத்தையும் பார்க்க வேண்டாம்.

அதேவேளை காலை எழுந்தவுடன் நம்முடைய உள்ளங்கையைப் பார்ப்பதும், வீட்டில் இருக்கும் சுவாமி படங்களையும் பூக்களையும் பார்ப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரங்கள் கூறுவதாக தெரிவிக்கபப்டுகின்றது.