அச்சம் வேண்டாம் ; மட்டக்களப்பில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை
மட்டக்களப்பில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை. பொதுமக்கள் அச்சமடைந்து அதிக அளவில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு புகையிரத நிலைய அதிபர் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பில் வாழும் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

நேற்று பிற்பகல் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் மிக நீண்ட வரிசைகள் காணப்பட்டதால், அத்தியாவசிய தேவைகளுக்கான எரிபொருள் கூட சில நேரம் பெற முடியாமல் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டது.
கொழும்பிலிருந்து எரிபொருள் ரங்கிகள் புகையிரதத்தில் வந்தாலும், நிலையங்களில் இடமில்லாத காரணத்தால் சில எரிபொருள் தொகுதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த காட்சியும் பொதுமக்கள் சாட்சியமாய் பார்த்தனர்.
மட்டக்களப்பில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை. பொதுமக்கள் அச்சமடைந்து அதிக அளவில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.