இலங்கையில் 03 இலட்சம் பேருக்கு நாய்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
நாட்டில் வருடாந்தம் நீர்வெறுப்பு அல்லது விசர் நாய்கடி நோயால் 2 முதல் 3 இலட்சம் பேர் வரை பாதிப்புபுக்குள்ளாவதோடு, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் விசர் நாய்கடி நோயால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் பிரிவின் தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று புதன்கிழமை (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விசர் நாய்க்கடி
நாட்டில் 2030 ஆம் ஆண்டளவில் விசர் நாய்க்கடி நோயை முழுமை கட்டுப்படுத்துவது எமது பிரதான இலக்காகும். 2005 ஆம் ஆண்டில் நாட்டில் நோயினால் 55 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில், கடந்த வருடம் அது 14 ஆகக் குறைவடைந்துள்ளதோடு, இவ்வருடத்தின் இதுவரையா காலப்பகுதியில் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தாலும், இந்நோயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். வருடதாந்தம் விசர்நாய் கடி இலக்காகிய 2 முதல் 3 இலட்சம் பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்களுக்கான தடுப்பூசிகளுக்காக மாத்திரம் ஆண்டுதோறும் 250 மில்லியன் ரூபா அரசாங்கத்தால் செலவிடப்படுகிறது.
தற்போது நாட்டில் உள்ள நாய்களில் 60 சதவீதமானவற்றுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன், அதனை 70 சதவீதமாக உயர்த்துவதே எமது இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாய் கடிக்கு இலக்கானவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக நாடு முழுவதும் 360 க்கும் மேற்பட்ட மையங்கள் இயங்கி வருகின்றன.
அத்தோடு, வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கும் தெருக்களில் உள்ள நாய்களுக்கும் 360 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினூடாக இலவசமாக கிருமிகளை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிக் செலுத்தப்படுகின்றன. இந்நோய் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த தந்தை ; அதீத பாசத்திற்காக இப்படியா? மகளின் செயலால் ஆடிப்போன பொலிஸார்
கடந்த வருடம் இந்நோயால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அர்களில் 4 பேர் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர் . இதுவொரு பாரதூரமான விடயமாகும்.
பொதுமக்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி அவற்றை பொறுப்புடன் வளர்ப்பதுடன், நாய் அல்லது பாலூட்டி விலங்குகள் கடித்திருப்பி அல்லது நகங்களால் கீறி இருப்பின் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று முறையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.