இலங்கையர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் ; விசேட தொலைபேசி சேவை அறிமுகம்
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள 1818 அவசர தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
சட்டவிரோத போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் "நாடு முழுவதும் ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்
நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் போதைப்பொருள் கடத்தல், விற்பனை அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் 1818 என்ற இலக்கத்திற்கு அழைத்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வழங்க முடியும்.
தகவல் வழங்குபவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் முழுமையாக இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுப்பது இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
ஜனாதிபதி செயலகத்தில் இயங்கும் "நாடு முழுவதும் ஒன்றாக" தேசிய செயற்பாட்டு பேரவையின் நேரடி மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, போதைப்பொருள் வர்த்தகம் அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் எந்த நேரத்திலும் 1818 என்ற இலக்கத்திற்கு அழைத்து பாதுகாப்பாக தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.