சிறுவர்களின் மூளை பாதிப்பு தொடர்பில் வைத்தியர்கள் எச்சரிக்கை
வைத்தியர்கள் எச்சரிக்கை டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்த இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனுமதிப்பது பொருத்தமற்றது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதனால் சிறுவர்களின் மூளை வளர்ச்சி வீதம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பெற்றோர் அதிக வேலைப்பளுவுக்கு மத்தியிலே தங்களது நேரத்தைச் செலவிடுகின்றனர்.
இந்தநிலையில், தங்களது வேலைகளை இலகுவாக முன்னெடுப்பதற்காக அவர்கள் தங்களது குழந்தைகளிடம் கையடக்க தொலைபேசிகளை வழங்குகின்றனர்.
குழந்தைகள் தொடர்ந்தும், கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தும்போது அவர்களின் மனநிலையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
எனவே, பெற்றோர்கள் குழந்தைகளைக் கையடக்க தொலைபேசி உள்ளிட்ட டிஜிட்டல் திரை பயன்பாட்டிலிருந்து இயலுமானவரைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.