மடியில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு வேலை செய்கிறீர்களா? : பல பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை
கைத்தொலைபேசிகள் போலவே, மடிக்கணினிகளும் பலரின் வாழ்க்கையில் முக்கிய பங்கை வகித்து விட்டது. இதை வைத்து எங்கு வேண்டுமென்றாலும் வேலை செய்யலாம்.
அதுவே இதை மடியில் வைத்து வேலை செய்வதன் மூலம் உடலிற்கு பல தீமைகள் ஏற்படுகின்றன. அது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
குழந்தை பெறுவதில் சிரமம்
லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்யும் பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, இவ்வாறு மடியில் வைத்து பயன்படுத்தினால் அது கருவில் இருக்கும் குழந்தையையும் சேர்த்து பாதிக்கும்.
அதுப்போலவே ஆண்களும் எவ்வாறு பயன்படுத்தினால் விந்தணுக்களின் வளர்ச்சி குறையும். இது கரு உருவாவதை குறைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தோல் புற்றுநோய்
லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்பவர்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படுமாம்.
அதை அந்தரங்க பகுதிகளுக்கு அருகில் வைத்தால் அப்பகுதியில் புற்றுநோய் ஏற்படும்.
கழுத்து மற்றும் முதுகு வலி
லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்பவர்களுக்கு கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படும்.
கழுத்து மற்றும் முதுகு பகுதிகள் வளைந்துவிடும். ஆகவே எவ்வாறு செய்வதை தவிர்த்துக்கொள்ளவும்.
கதிர்வீச்சு
லேப்டாப்பில் இருந்து EMF எனும் கதீர் வீச்சு ஒன்று ஆரோக்கியத்திற்கு விளைவிக்கும் முகமாக வெளியிடப்படுகிறது.
ஆகவே மடியில் வைத்து வேலை செய்வதை முற்றிலும் குறைத்துக்கொள்ள வேண்டும்.