உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூ பற்றி உங்களுக்குத் தெரியுமா
வண்ண வண்ணமாய், அழகிய தோற்றத்தில் காணப்படுகின்ற பூக்கள் அன்பு, பக்தி, அழகு, ஆரோக்கியம் என்பவற்றின் வெளிப்பாடுகளாக விளங்குகின்றது என்றால் அது மிகையாகாது.
இந்தப் பரந்த பூவுலகில் எண்ணிலடங்கா மலரினங்கள் காணப்படுகின்றன, தனக்கென்ற தனிச்சிறப்புகளுடன் காணப்படுகின்ற இந்தப் பூக்கள் உலகளாவிய ரீதியில் விற்பனையாகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
விலையுயர்ந்த பூ
உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூவாக குங்குமப்பூ காணப்படுகிறது, இது குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரமே விளையும் என்பது மாத்திரமல்லாமல் ஆண்டின் சில மாதங்களில் மாத்திரமே கிடைக்கின்றது.
இந்ந பூவானது குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜம்முவில் உள்ள கிஷ்த்வார் மற்றும் ஜன்னத்-இ-காஷ்மீரில் உள்ள பாம்பூர் போன்ற பகுதிகளில் முக்கியமாக வளர்க்கப்படும்.
இந்தச் செடி 15 முதல் 25 செமீ உயரத்திற்கு வளரக் கூடியது, ஒரு செடியில் இருந்து விதைகள் இல்லாமல் 2-3 பூக்கள் மட்டுமே கிடைக்கும் என்பதால் ஒரு கிலோ குங்குமப்பூவின் விலை 3 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாவதாக கூறப்படுகிறது.
மருந்துவ குணம் நிறைந்துள்ளது
குங்குமப்பூ இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் விலையுயர்ந்த கிராக்கி நிறைந்த மசாலாப் பொருளாக காணப்படுகிறது.
குங்குமப்பூ ஒரு மசாலாப் பொருளாகக் காணப்பட்டாலும், அதில் மருந்துவ குணம் நிறைந்துள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் தெரிவிக்கபட்டுள்ளது.
இது பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் மாதவிடாய் காலங்களின் முன்பாக ஏற்படும் மன அழுத்தம், மற்றும் பொதுவான எடை இழப்பு ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் அவர்களின் பேறு கால நாட்களில் குங்குமப்பூவை பாலில் கலந்து சாப்பிட்டால் பிறக்க உள்ள குழந்தை சிவப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இன்றுவரை இருந்து வருகிறது.
குங்குமப்பூ மாத்திரமல்லாது, தாவர இராச்சியத்தில் மற்றொரு இலாபகரமான போட்டியாளராக வெணிலா (venilla) விளங்குகிறது.
இது ஒரு கிலோ 50 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது, வெண்ணிலா உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அது இலாபகரமான உற்பத்திப் பொருளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.