முட்டையுடன் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா?
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் விரும்பி உண்ணும் உணவு முட்டைதான். முட்டையை அவர் அவர் விருப்பதற்கு ஏற்ப சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால், ஒரு சில உணவுப் பொருள்களை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என உங்களுக்கு தெரியுமா?
அவ்வாறு எந்தெந்த உணவுகளுடன் நாம் முட்டையை சேர்த்து சாப்பிடக்கூடாது என நாம் இங்கு பார்ப்போம்.
சிட்ரஸ் வகை பழங்கள்
ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களை முட்டை சாப்பிடும் போது சேர்த்து சாப்பிடக் கூடாது.
இனிப்புப் பண்டங்கள்
பொதுவாக முட்டை ஒரு எளிய காலை உணவாக அமையும். ஆனால் சில வேளைகளில் அதனை இனிப்பான பண்டங்களுடன் காலையில் சேர்த்து சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடாமல் ஒன்று முட்டையை மட்டும், குறைந்த சர்க்கரை கொண்ட உணவுகளோடு சேர்த்து அல்லது ஒட்டுமொத்தமாக தனியா இனிப்பு உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பால்
பல காலமாக முட்டையுடன் பால் எடுக்கக் கூடாது என்று சொல்லி வருகிறார்கள். இது ஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். எனவே, முட்டை சாப்பிடும் போது சேர்த்து பால் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஊறுகாய்
முட்டையுடன், ஊறுகாய் போன்ற உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது. அதுபோல, முட்டை சாப்பிடும் போது அதனுடன் தேநீர் குடிப்பதையும் தவிர்த்து விட வேண்டும். சில வேளைகளில் இது வாயுத் தொல்லை மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.
சோயா
சோயா பால் - முட்டை இரண்டுமே அதிக புரதம் நிறைந்த உணவுகள். இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது உடலில் புரதத்தின் சீரற்ற தன்மையை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படும்.