இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன் தெரியுமா?

Healthy Food Recipes Indigestion Heart Attack Blood Pressure
By Sahana Jun 05, 2025 12:25 AM GMT
Report

நம் முன்னோர்கள் பெரும்பாலாக மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாகவே இரவு உணவை சாப்பிட்டுவிடுவதுண்டு. அதுபோல இரவு சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழும் பழக்கத்தையும் கொண்டிருந்தனர்.

ஆனால், வேலை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக தற்போதைய காலகட்டத்தில் இரவு உணவு உட்கொள்வது தாமதமாகிறது. இரவு 10-11 மணியைத் தாண்டி இப்போதெல்லாம் 'மிட் நைட் தபா'க்கள் வந்துவிட்டன.

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன் தெரியுமா? | Do You Know Why You Should Eat Dinner Early

நள்ளிரவில் சென்று அசைவ உணவுகளைச் சாப்பிடும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இம்மாதிரியான பழக்கவழக்க மாற்றங்கள் உடலில் இயங்கும் உயிரியல் கடிகாரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

இவை உடல் உபாதைகள், நோய்கள் ஏற்படக் காரணமாகின்றன. குறிப்பாக இரவு தூக்க நேரத்தில் வயிற்றுப் பிரச்னைகள், செரிமானக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, முடிந்தவரை இரவு உணவை சீக்கிரமாக சாப்பிட்டுவிட வேண்டும்.

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன் தெரியுமா? | Do You Know Why You Should Eat Dinner Early

தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் 12 மணி நேர இடைவெளி வரை எடுத்துக்கொள்ளலாம். அதாவது இரவு 8 மணிக்குச் சாப்பிட்டால் அடுத்ததாக காலை 8 மணிக்கு சாப்பிட வேண்டும்.

இந்த நடைமுறை ஒரு சில நாள்கள் கடினமாக இருப்பது போன்று உணரலாம். ஆனால் பழகிவிட்டால் இயல்பாக மாறிவிடும். அதுமட்டுமின்றி உங்கள் உடல்நலனுக்கு இது மிகவும் நல்லது.

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன் தெரியுமா? | Do You Know Why You Should Eat Dinner Early

இரவு சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன்?

இரவு உணவை சீக்கிரமாகவே சாப்பிடும்போது உறங்குவதற்கு முன்னதாகவே உணவு முழுவதும் நன்றாக செரிமானம் அடைகிறது. ஆம் , கிட்டத்தட்ட வெறும் வயிற்றில்தான் உறங்கச் செல்ல வேண்டும்.

இதனால் செரிமான உறுப்புக்கள் அமைதி நிலைக்குச் செல்கின்றன. நல்ல உறக்கம் இருக்கும்போது உடலில் ஏற்படும் கோளாறுகள் சரியாகிறது. உடல் கோளாறுகள் சரிசெய்யப்படும் நேரம் இது.

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன் தெரியுமா? | Do You Know Why You Should Eat Dinner Early

இதனால் அடுத்த நாள் காலை புத்துணர்ச்சியுடன் எழ முடியும். சாப்பிட்டவுடன் உறங்குவதால் உணவு செரிக்காமல் வயிற்றில் படிந்துவிடும் அல்லது உறங்கும்போது செரிமானம் தொடங்குவதால் தூக்க கலக்கம் ஏற்படும்.

இரவில் அதிக கொழுப்பு, கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. எளிதாக செரிமானம் அடையக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். திடமான உணவுகளைச் சாப்பிடுவதால் தூக்கத்தின் தரம் தடைபடுகிறது.

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன் தெரியுமா? | Do You Know Why You Should Eat Dinner Early

சூரியன் மறைவுக்குப் பிறகு, உடலில் மெலடோனின் சுரப்பு வெளியாகத் தொடங்குகிறது. இது செரிமான நொதிகளைக் குறைக்க குடலுக்கு சமிக்ஞை செய்கிறது. இதனால் செரிமான செயல்முறை குறைகிறது. ஏனெனில், மெலடோனின் இந்த நேரத்தில் உடலை குணப்படுத்தத் தொடங்குகிறது.

சூரியன் மறைவுக்குப் பின்னர் பொதுவாகவே குறைவாக எளிதாக ஜீரணம் அடையக்கூடிய உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

இதனால் உணவு செரிமானம் அடைவதுடன் அமிலத்தன்மை, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். இரவு தாமதமாக உண்பது உடல் வீக்கம், உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்னைகள், உடலில் உப்பு சேர்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்குகிறது.

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன் தெரியுமா? | Do You Know Why You Should Eat Dinner Early

சரியான நேரத்தில் சரிவிகித உணவை நம் உடலுக்கு ஊட்டுவது முக்கியம். அதிலும் தூங்கச் செல்வதற்கு முன்னதாக எடுத்துக்கொள்ளும் இரவு உணவில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

உடலுக்கு ஏற்றவாறு நீங்கள் செயல்பட்டால் உங்கள் பேச்சை அது கேட்கும். இல்லையெனில் அதன்வழியில் நீங்கள் பயணிக்க நேரிடும். எனவே, இரவு உணவை குறைந்தது உறங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக எடுத்துக்கொள்வதுடன் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் விழியுங்கள். 

இரவு உணவை சீக்கிரம் சாப்பிட வேண்டும், ஏன் தெரியுமா? | Do You Know Why You Should Eat Dinner Early

நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US