கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம் ; சகோதரன் உயிரிழப்பு
தங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாகொட பகுதியில் தனது சகோதரனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, தடியால் தாக்கப்பட்டு 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (28) இரவு இடம்பெற்ற தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

28 வயதுடைய சந்தேகநபர் கைது
உயிரிழந்தவர் மஹாகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தங்கல்ல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.