திருஷ்டிகளும், பொறாமை கண்ணேறுகளும் கழிய இதை செய்யுங்கள்
அனைவருடைய பார்வையும் நம் மீது படும் போது சரியாத்தான் இருக்கும் என்று கூற முடியாது.
சிலருடைய பார்வைகளில் நன்மைகள் நடக்கவும் சிலருடைய பார்வைகளில் தீய வினைகள் நடக்கவும் வாய்ப்புகள் உண்டு.
திருஷ்டிகள் நீங்க
பொல்லாத திருஷ்டிகள் நீங்க, கண்ணேறுகள் கழிய ஞாயிற்றுக் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போட்டு அதில் வெண்கடுகு சேர்த்து பொரிய விடவும் இதனால் எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டிகளும் படபடவென பொறிந்து எறிவது போல எரிந்து விடும் என்பது ஐதீகம்.
அது மட்டும் அல்லாமல் தனி நபருக்கான திருஷ்டிகள் அதாவது ஒருவர் மீது மற்றவர்களுக்கு இருக்கும் கெட்ட பார்வைகளால் உண்டாகக் கூடிய திருஷ்டிகளும் உண்டு.
பொறாமை
ஒரு குடும்பத்தில் ஒருவர் அதிகமாக சம்பாதிக்கிறார் என்றால் அவரைக் கண்டு பொறாமைப்படுபவர்கள் உண்டு. உறவுகளுக்கு உள்ளேயும் மட்டுமல்லாமல் வெளியே இருப்பவர்களுக்கு கூட இவ்வாறு பொறாமைப்படுபவதுண்டு.
அத்தோடு நம் முதுகுக்கு பின்னால் தெரியாமல் பேசுபவர்களும் உண்டு. இத்தகையவர்களுடைய கெட்ட எண்ணங்கள் நம்மை தீண்டாமல் இருக்க துர்கையை வழிபடலாம்.
துர்க்கை வழிபாடு
விளக்கு ஏற்றி வழிபாடு
பகைவர்கள், துரோகிகள், எதிரிகள் அனைவரையும் துவம்சம் செய்யக்கூடிய ஆற்றல் துர்க்கைக்கு உண்டு. இந்த மகா துர்கைக்கு செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டு வருபவர்களுக்கு சகல விதமான வெற்றிகளும் வந்து சேரும்.
செவ்வாய்க் கிழமை வழிபாடு
தீவினைகள் அகலும், திருஷ்டிகள் நீங்கும் அத்தோடு வீட்டில் வெள்ளி அல்லது செவ்வாய்க் கிழமையில் பூஜை அறையில் அமர்ந்து கொண்டு வாழை இலை, மாவிலை அல்லது வெற்றிலையை எடுத்து வையுங்கள். அதில் சிறிதளவு சுத்தமான குங்குமத்தை வையுங்கள்.
சிகப்பு கயிறு
பின்னர் கையில் கட்டிக் கொள்ளும் சிகப்பு கயிறு ஒன்றை புதிதாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் 5 முறை கீழ்வரும் இந்த துர்க்கையின் மந்திரத்தை உச்சரித்து முடிச்சுகள் போட வேண்டும். முடிச்சினை போட்டு முடித்த பின்பு குங்குமத்தின் மீது இந்த கயிறை வைக்க வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு முடிச்சுகள் மீதும் சிறிதளவு குங்குமத்தை எடுத்து இதே மந்திரத்தை உச்சரித்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு இந்த கயிறை எடுத்து குங்குமத்தை உதறிவிட்டு வலது கையில் கட்டிக் கொள்ளுங்கள். ஆண், பெண் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம்.
சுற்றி இருக்கும் எதிரிகள், துரோகிகள் போன்றவர்களிடமிருந்து உங்களை காக்கும் ஒரு கவசமாக இந்த கயிறு செயல்படும்.
சாம்பிராணி தூபம்
இவ்வாரு உருவேற்றி நமக்கு நாமே கட்டிக் கொள்ளலாம் அல்லது பிறருக்கும் நாம் செய்து கட்டிவிடலாம். வீட்டில் திடீரென கெட்ட வாடை அடித்தால் இது போன்ற திருஷ்டிகள் இருக்கிறது என்பதன் அறிகுறியே ஆகும் எனவே சம்பந்தமில்லாத துர்வாடை அடிக்கும் பொழுது வீடு முழுவதும் கல் உப்பு கலந்த தண்ணீரால் துடைத்து விடுங்கள். துடைத்த பின்பு சாம்பிராணி தூபம் போடுங்கள். இப்படி செய்து வர பிரச்சனை தீரும்.