காய்ச்சல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் ; பெற்றோருக்கு முக்கிய அறிவுறுத்தல்
பாடசாலைகள், அரச நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் அதிகளவிலான டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பூச்சியியல் ஆய்வுகள் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிள்ளைகள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு பெற்றோருக்கு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை
அவர் மேலும் கூறுகையில்,
இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 44,480 ஆகும்.
இதேவேளை, டெங்கு நோய் காரணமாக இதுவரை 28 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நுளம்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், இன்றைய தினம் (20) வீடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளாகங்களைச் சுத்தம் செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகளில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.