இலங்கை கடற்படை அதிகாரி இந்தியாவில் உயிரிழப்பு; உடலம் நாட்டுக்கு
இந்தியாவில் நடைபெற்று வரும் 'பிம்ஸ்டெக்' (BIMSTEC) கடற்படை பாதுகாப்பு பயிற்சியில் கலந்துகொண்ட இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர், திடீரென ஏற்பட்ட சுகயீனத்தினால் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 'எஸ்.எல்.என்.எஸ். கஜபாஹு' கப்பலில் கடமையாற்றிய கொமோண்டோ எஸ்.ஏ.எஸ்.எம். சமரகோன் ஆவார்.
இவர் நவம்பர் 02 ஆம் திகதி இந்தியாவின் ஸ்ரீ விஜயபுர பகுதியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அதிகாரியின் எதிர்பாராத உயிரிழப்பு குறித்து இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, கொமோண்டோ சமரகோன் இந்தியாவில் நடைபெறும் பிம்ஸ்டெக் கடல்சார் பாதுகாப்பு பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படைக் குழுவின் ஒரு உறுப்பினராவார்.
அவரது உடலம் நேற்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-130 ரக சிறப்பு விமான மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.