புலம்பெயர் தேசத்தில் இலங்கை தமிழர் மத்தியில் அதிகரிக்கும் விவாகரத்து!
புலம்பெயர் தேசத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றதாக சுவிட்சர்லாந்தில் பேர்ன் மாநிலத்தில் வாழ்ந்து வரும் சமூக சேவையாளரும் ஆசிரியருமான முருகவேல் நந்தினி தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களுடை வாழ்க்கை முறையில் இருக்கின்ற சிக்கல்கள் தற்போதிருக்கக் கூடிய சூழ்நிலைகள் எதிர்காலத்தில் தமிழ் மொழி குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் எந்தளவில் முதன்மை பெறும் என்கின்ற ஐயப்பாடுகள் இன்று பலர் மத்தியில் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து முருகவேல் நந்தினி விரிவாக விபரிக்கிறார் .