பார்ட்டிக்கு சென்றதால் பணியிடை நீக்கம்!
குருநாகலில் பார்ட்டிக்கு சென்ற பொலிஸ் சர்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது இளைஞர்கள் குழுவினால் தாக்கப்பட்ட பொலிஸ் சர்ஜன்ட் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இளைஞர்கள் குழுவுடன் வாக்குவாதம்
நிகவெரட்டிய பன்சியகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கசிப்பு வியாபாரம் செய்வதாக கூறப்படும் நபரின் வீட்டில் விருந்தை முடித்துக் கொண்டு குறித்த பொலிஸ் சர்ஜன்ட் தனது வீட்டிற்கு திரும்பும் போது , இளைஞர்கள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அதனையடுத்து சரமாரியாக தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து தாக்குதலுக்காளாகிய பொலிஸ் சர்ஜன்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.