சுவிஸ் குடியுரிமை குறித்து வெளிநாட்டவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்! தோல்வியடைந்த பிரேரணை
சுவிஸில் வாழும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டின் கடவுச்சீட்டை பெறுவதை எளிதாக்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான தேசிய கவுன்சில் நிராகரித்துவிட்டது.
வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான குடியிருப்பு கால தகுதிகளை குறைக்கும் புதிய முயற்சியாக அண்மையில் பிரேரணை ஒன்று கிரீன்ஸ் லிபரல் கட்சியால் முன்வைக்கப்பட்டது.
இருப்பினும், சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு தடையாக இருக்கும் விடயங்களை குறைக்கவேண்டும் என்னும் கிரீன்ஸ் லிபரல் கட்சியின் கோரிக்கையை தேசிய கவுன்சில் சுவிட்சர்லாந்து நிராகரித்துவிட்டது.
குடியுரிமை அளிப்பதில் நியாயமான விதிகள் தேவை என்று கோரி முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை, சுவிஸ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் வெளிநாட்டினர் 10 வருடங்கள் சுவிஸில் வசிக்க வேண்டும் என்ற தற்போதைய முறையைப் பராமரிக்க விரும்புவதாகக் கூறி ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் நான்கு முறை நிராகரித்துவிட்டனர்.