1½ வயது குழந்தையைப் பறிகொடுத்த மாற்றுத்திறனாளி தாய் ; விஜய்யின் கூட்ட நெரிசலால் துயரம்
தமிழகத்தின் கரூரில் பிரசாரக் கூட்டமொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டை உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல்களையும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
குழந்தை பலி
இந்தநிலையில் கரூர் கூட்ட நெரிசலில் மாற்றுத்திறனாளி தாய் ஒருவரின் 1½ குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த குழந்தையை அவரது உறவினர் ஒருவர் பிரசாத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த மாதம் பிறந்தநாள் கொண்டாடவிருந்த நிலையில் அந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அந்த குழந்தையைக் கூட்டிச் சென்ற உறவினரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
