அனுர அரசின் அதிரடி; வெளியேறும் மஹிந்தவை காண சென்ற பல முக்கியஸ்தர்கள்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு இன்று (11) காலை சென்றுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வௌியானது.
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்கள் ரத்து
"ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டத்தின் விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தி வருகிறார் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அவரும் அந்த சலுகையை இழந்துள்ளார்.
அதன்படி, மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்குச் செல்ல உள்ளார் .
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விட்டை விட்டு வெளியேர்யதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.