இன்று உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வீழ்ச்சி!
உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் (11) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,204.67 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதும், முதலீட்டாளர்கள் லாபமீட்டலில் (Profit-booking) ஈடுபட்டுள்ளதும் தங்கம் வெள்ளி விலைகள் சரிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

வலுவடைந்த டொலரின் மதிப்பு - தங்கம் வெள்ளி விலைகள் சரிவு
இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் வெள்ளி 88.31 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை பாரிய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது.
தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சி காரணமாக, உள்நாட்டுத் தங்கச் சந்தைகளிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு சரிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானுடனான மோதல் விரைவில் ஒரு முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீதான ஆர்வம் முதலீட்டாளர்களிடையே சற்று குறைந்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம் என என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.