எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து விட்டேன்; யாரை கூறினார் விஜய்?
எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து விட்டேன் இனி அரசியலை தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை என தமிழக் வெற்றி கழக தலைவர் விஜய் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய பிறகு சினிமாவில் இனி நடிக்கமாட்டேன் என அதிரடியாக அறிவித்தமை அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இனி அரசியலை தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை
அவரது கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸில் பல்வேறு சிக்கல்கள் வந்து, இன்னும் சென்சார் சான்றிதழே கிடைக்காமல் இருக்கிறது.
அதன்பின்னர் அரசியலில் தீவிரமாக விஜய் ஈடுபட்டு வந்த நிலையில், அவரது அரசியல் வருகைக்கு தமிழக மக்கள் பெரும் ஆதரவை வழங்கிய நிலையில் , விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு, மற்றும் த்ரிஷா உடன் இணைத்து வரும் வதந்திகள் என விஜய் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலை நேற்று (10) விஜய் ஆரம்பித்தார். இதன்போது "எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து விட்டேன். இனி அரசியலை தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை" என விஜய் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.