எல்ல விபத்து இடம்பெற்ற இடத்தில் ஏற்பட்ட மாற்றம்
15 பேரை காவுகொண்ட எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில், மண் தடுப்புகள் மூலம் பாதுகாப்புத் தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர், சட்டத்தரணி கபில ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி இரவு, தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று> சுற்றுலா சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றது.
குறித்த பகுதியில் இதற்கு முன் பல வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
எனவே அபாயகரமான விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து மண் தடுப்புக்கள் மூலம் பாதுகாப்பு தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் கூறினார்.