சமந்தா மற்றும் நாகசைதன்ய விவாகரத்து பேச்சு இந்த காரணத்தால் தான் எழுந்ததா?
தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு நாளுக்கு நாள் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சமந்தா சமூக வலைத்தளத்தில் தனது பெயருடன் சேர்த்து வைத்திருந்த நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை நீக்கியிருந்தார். அப்போதில் இருந்து இந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அவர்கள் விரைவில் விவாகரத்து செய்துகொள்ள போவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது விரைவில் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து வழக்கு தொடர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் The Family Man 2 வெப் தொடரில் சமந்தாவின் கதாபாத்திரத்தால் தான் அவர்கள் பிரிய காரணம் என கூறப்படுகிறது.