வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ; முன்னாள் எம்பி கைது; அதிரடியாக சோதனையிடப்பட்ட வீடு

CID - Sri Lanka Police Sri Lanka Politician Crime
By Sulokshi Apr 16, 2026 02:00 PM GMT
Report

  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, பெறப்பட்ட சோதனை பிடியாணையின் அடிப்படையில் இன்று (16) அவரது வீடு சோதனையிடப்பட்டது.

இதன்போது 221 T56 ரகத் தோட்டாக்கள், 2 T56 ரக மெகசின்கள், 7.2 ரகத் தோட்டாக்கள் 31, 0.2 ரகத் தோட்டாக்கள் 103 மற்றும் ஒரு கைக்குண்டு என்பவற்றை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றினர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ; முன்னாள் எம்பி கைது; அதிரடியாக சோதனையிடப்பட்ட வீடு | Details Arrest Ex Mp Chandana Kathriarachchi

செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு

இதனடிப்படையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட கைக்குண்டு செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சந்தன கத்ரியாராச்சியின் வீட்டில் முன்னெடுத்த மேலதிக சோதனைகளின் போது, அங்கு பதிவு செய்யப்பட்ட 4 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவுஸ்ரேலியாவில் உயரிய விருதை வென்ற ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!

அவுஸ்ரேலியாவில் உயரிய விருதை வென்ற ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!

அவற்றில் ஒரு துப்பாக்கி சந்தன கத்ரியாராச்சியின் பெயரிலும், மற்றைய 3 துப்பாக்கிகள் அவரது மனைவியின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவையில் 2 சொட்கன் (Shotgun) ரக துப்பாக்கிகளும், 2 9mm ரக துப்பாக்கிகளும் அடங்குகின்றன.

சந்தன கத்ரியாராச்சி வசம் இவ்வளவு பெரிய அளவிலான ஆயுதங்கள் இருப்பதற்கான காரணத்தை கண்டறிய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் ; CID இல்முறைப்பாடு!

எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் ; CID இல்முறைப்பாடு!

சந்தேகநபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US